விமர்சனமும் விளக்கமும்

அன்பார்ந்த சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..

 

புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாகவும் ஏகத்துவ கொள்கை சம்மந்தமாகவும் நம் மக்கள் மத்தியில் இருக்கும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் முகமாக இந்த பகுதி நம் இணையதளத்தில் துவக்கப்பட்டுள்ளது. உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் நீங்கள் இந்தப் பகுதியில் பதிவு செய்யலாம். அதற்கான விளக்கம் அல்லது பதில் இந்த பகுதியிலேயே வழங்கப்படும்.

 

கேள்வி கேட்பவர்கள் அல்லது விமர்சிப்பவர்கள் தங்களது பெயரை தெறிவிக்கவேண்டும். மேலும் கேள்வி மற்றும் விமர்சன நடை கண்ணியமான முறையில் அமைந்திருத்தல் வேண்டும் தவறாக வார்த்தை பிரயோகங்கள் இருந்தால் அந்த கருத்து தளத்தில் இருந்து நீக்கப்படும்.

ஏகத்துவம் / TNTJ PVS

Date: 31/12/2011

By: எடிட்டர்

Subject: Re: bothai palakam

அவர் சரியாக தொழுதால் அதற்கான நன்மையும், அவர் செய்யும் தீமைக்கு தகுதியான தீமையும் வழங்கப்படும்

Date: 14/11/2011

By: sulaimansait

Subject: photos

naam aneyum sattail uruvam poretha padangal irunthal tholuhai kudathu entru nanbarhal kurukerarhal idu patre velakam devai

Date: 17/11/2011

By: Editor

Subject: Re: photos

நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான்' (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன். அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

புஹாரி 373

மேலதிக தகவலுக்கு ---
https://aleemqna.blogspot.com/2010/07/blog-post_2842.html

Date: 26/10/2011

By: sulaimansait

Subject: jop vaccant

salam.sila sahatarhal visitl valaikuda vanttu velai vaipu kedaikamal thirumba thunpatudan oor therubukirarhal.idu pontra makkalukku namadu inaiya talathil job vaccant news therevithal nantraha irukumei?

Date: 22/10/2011

By: sulaimansait

Subject: election

putethaha vantha oratchi mantra urupinarkalukku tntj pvs n nilai enna?

Date: 24/10/2011

By: Editor

Subject: Re: election

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சுலைமான் அவர்களுக்கு...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊராட்சி மன்றத் தேர்தல் நிலைபாடு பற்றி உங்களுக்கு தெறியும் என நினைக்கிறேன். யாரையும் வெளிப்படையாக ஆதரிப்பதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அது நம்மை எந்த வகையிலும் பாதிக்காது. எப்போதும் பொல நமது கோரிக்கைகளை சம்மந்தப்பட்வர்களுக்கு எடுத்து வைப்போம்.

Date: 10/10/2011

By: ali

Subject: one doubt

tntj pvs'il vulla yentha memberum suya arivodu pesuvathilai thaan mattum anaihum therinthaven yenru oru aanavam vundu ithai pattri nengal yenna solhireerkal

Date: 24/10/2011

By: Editor

Subject: Re: one doubt

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அலி அவர்களுக்கு

முதலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில அளவில் ஒரு தலைமையை கொண்டு செயல்படுகிறது. சில முடிவுகளை மாநிலத் தலைமை எடுக்கும் பட்சத்தில் அதை பின்பற்ற வேண்டும் என்பதை தெறியப்படுத்திக் கொள்கிறேன்.

பொதுவாக உங்களைப் போல் பலரும் இது போன்ற கருத்தை கொண்டுள்ளனர். அவர்களுக்குத்தான் எல்லாம் தெறியும் என்ற ஆணவம் கொண்டுள்ளனர் என்று. அதற்கு முதல் காரணம் இஸ்லாமிய மார்க்க விவகாரங்களை பெரும்பாலான மக்கள் அதிகம் அறிந்திராக காரணத்தால் நாம் சொல்வதும், நடந்து கொள்வதும் அப்படி தெறியலாம்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்தான் மார்க்கத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் நின்று பார்த்தால் எல்லாமே காரண காரியத்துடன் தான் அமைந்திருக்கும் என்பதை நீங்களும் உணரலாம்.

இன்னும் இயற்கையாகவே ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளதாலும், சிலர் நடுநிலையோடு அல்லாஹ் தந்த அறிவை பயன்படுத்தி நாம் என்னதான் சொல்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ளாமலும், அல்லது விளங்கிக் கொள்ள விரும்பாமலும், அல்லது பொதுவாக இவர்கள் குழப்பவாதிகள் என்று ஓரங்கட்டப்படுவதும் போன்ற சமூகம் சார்ந்த காரணிகளும் அவர்களின் அது போன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு காரணமாக இருக்காலம்.

ஆனால் அதையும் கூட எல்லோரிடமும் காண இயலாது. இருந்தாலும் இன்ஷா அல்லாஹ் அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம், உள்ளுர் நிர்வாகிகளுக்கும் இந்தத் தகவலை எடுத்துவைப்போம்.

Date: 18/07/2011

By: M.Haq

Subject: பதில் சொல்லுங்கள்

அஸ்ஸலாமு அழைக்கும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரை செவியுற்றால் நாம் அவர்கள் மீது சலவாத்து கூற வேண்டும் ) அனால் உங்களின் ஜமாத் பயானில் பலயிடங்களில் நபியுடைய பெயரை தலையில் அடித்த மாதுரி சொல்லுகிறார்கள் அனால் அந்த பானை செய்ய கூடியவர் சலவாத்து சொல்வதில்லையே அது ஏன் என்பதை விளக்க முடியுமா

இப்படிக்கு
நற்புடன் நண்பன்

Date: 18/07/2011

By: Editor

Subject: Re: பதில் சொல்லுங்கள்

வ அலைக்கும் சலாம் நண்பர் ஹக் அவர்களே... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் சொல்லும் போது கண்டிப்பாக ஸலவாத் கூறவேண்டும் அப்படித்தான் நமது இமாம்களும் தாயிக்களும் பயான் செய்கிறார்கள். சில நேரங்களில் ஹதீஸில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதோ அதே போல் பயன்படுத்த வேண்டிய நிலையில் அந்த ஹதீஸ் பயன்பாட்டுக்கு மட்டும் அப்படி பயன் படுத்தப்படும். சில இடங்களில் அல்லாஹ் தீருமறையில் யா முஹம்மத் என பயன்படுத்துவான் அப்போது அந்த திருமறை வசனத்தை பயன்படுத்தும் போது பேசும்போது மட்டும் அப்படி பயன்படுத்தப்படும்.

அல்லாஹ் பயன்படுத்தியதைப் போன்று அல்லது சம்மந்தப்பட்ட ஹதீஸ் நடையைப் போன்று பயன்படுத்தும் போது அப்படியே பயன்படுத்தப்படும்
இந்த வித்தியசத்தை புறிந்துகொண்டால் குழப்பமில்லை.

<< 1 | 2

New comment